அதிரை கரையூர் தெரு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய TNTJ வினர் (படங்கள் இணைப்பு)

அதிரை கரையூர் தெருவில் நேற்று மதியம் கேஸ் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் 50 க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில் அனைவரது வீடுகளுடன் உடமைகளும் சேதமாகின. இதனால் ₹1 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கரையூர் தெரு மக்களுக்கு TNTJ அதிரை கிளை நிர்வாகிகள் உதவிகரம் நீட்டியுள்ளனர்.

கேஸ் வெடித்ததில் வீடுகளை இழந்த 42 குடும்பங்களுக்கும் தேவையான மன்னென்னை அடுப்புகள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 கிலோ அரிசி, தலா ஒரு தண்ணீர் குடம், ஒரு வேட்டி, சட்டை, புடவை, ஒவ்வொரு குடும்பங்களுக்கு 1 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கினர்.

Close