அதிரையில் அரசு பேருந்து லாரி மோதி பயங்கர விபத்து (படங்கள் இணைப்பு)

இன்று (30/05/2017) காலை சுமார் 8 மணியளவில் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிரை வண்டிபேட்டை பழைய இரும்புக்கடை அருகில் இந்த பேருந்து சென்று கொண்டிருக்கும் போது அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 5 பெண்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் மற்றும் படங்கள்: ஜைது (அதிரை பிறை)

Close