அதிரை பைத்துல்மாலின் 24 ஆண்டுகளாக சேவைகளை விளக்கி சிறப்பு மலர் வெளியீடு!

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் ஆற்றிய பொதுநல சேவைப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறும் வகையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து சிறப்பு மலரை வெளியிட்டார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் மற்றும் ஏனைய நிர்வாகிகள் – உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் வாசிக்கும் வகையில் கையடக்கமாக சிறப்பு மலர் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2000 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் நிர்வாகக்குழு பட்டியல், அதிரை பைத்துல்மாலின் சேவைத் திட்டங்கள், நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள், 24 வருடங்கள் ஆற்றிய சேவை திட்டங்களின் புள்ளியல் விவரங்கள், புகைப்படங்கள், கொடையாளர்கள் – பயனாளிகள் தொடர்புகொள்ளும் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துமால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Close