32 ஆண்டு காலமாக அதிரையர்களின் நன் மதிப்பை பெற்ற அய்யுப் வடை – கடை.!

நமதூர் மார்க்கெட் கிராணி மளிகை அருகே சுமார் 32 ஆண்டு காலமாக வாடா, சம்சா போன்ற நொறுக்கு தீனி வியாபாரம் செய்து வரும் அய்யுப் அவர்கள் நம்முடன் பகிர்ந்தது.

அய்யுப் (45) அவரது 13 வயதில் இந்த தொழிலை துவங்கினார். இவர் சுமார் 32 ஆண்டுகளாக மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளர்.

இவருடை கடையில் கிடைக்கும் பருப்பு வடைக்கு அதிரையிலயே போட்டி போட முடியாத அளவிற்கு அப்படி ஒரு சுவை. இவருக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் ஒரு தின் பண்டம் 20 பைசாவிற்க்கு விற்பனை செய்யபட்டது. தற்போது ₹5 ரூபாய் க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுவை மிகுந்த பொருட்கள் என்பதனால் எல்லா பகுதிகளில் இருந்தும் இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வரத்துவங்கினர்.

இறைவன் அருளால் இதன் மூலம் வரக்கூடிய வருமானம் இவர் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கிறது.

32 ஆண்டு காலமாக ஒரே இடத்தில் இவர் வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Close