உ.பி யில் நோன்பு வைத்திருந்த முஸ்லிம் பெண்ணை ரயிலில் பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பயணி ஒருவர் ரெயிலில் வைத்து ரெயில்வே காவல்துறை கான்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான மீரட்டை சேர்ந்த அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கமல் சுக்லா என்ற 24 வயது எஸ்கார்ட் காண்ஸ்டபிள் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். வன்புணரப்பட்ட பெண் நோன்பு வைத்திருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் சுக்லா என்ற எஸ்கார்ட் காண்ஸ்டபிள் கைது செய்யபப்ட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில், “பாதிக்கப் பட்ட பெண் சாதாரண கோச்சில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரம்ஜான் நோன்பு வைத்திருப்பதால் சாதாரண கோச் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவே, ரிசர்வ்ட் கோச் கேட்டுப்பெற முயற்சித்துள்ளார். இதனை அறிந்த கமல் சுக்லா. அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் ரிசர்வ்ட் கோச்சுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். உடன் கோச் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை கண்ட மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் காண்ஸ்டபிளை பிடித்த பயணிகள், ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் கொலை கற்பழிப்பு என அதிகரித்துள்ளமையும் அது குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author