மாட்டிறைச்சி தடைக்கு எதிராக அதிரையில் SDPI நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை என்ற மத்திய அரசின் அறிவிப்பு சிறுபாண்மை மக்களை மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு இந்த அறிவிப்பு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அதிரையில் SDPI கட்சி சார்பாக பேருந்து நிலையில் மாட்டிறைச்சி தடையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது

இன்று (மே 31) மாலை 5 மணியளவில் தொடங்கிய  இந்த போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட SDPI தலைவர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மத்திய பா.ஜ.க அரசின் பாசிச கொள்கைகள் குறித்து பேசிய அவர் மாட்டிறைச்சிக்கான தடை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் விவசாயிகளையும் வதைக்கும் செயல் என குற்றம்சாட்டினார். இதில் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியினர், அதிரை மக்கள் மற்றும் மாற்றுமத சொந்தங்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

Close