அதிரை கரையூர் தெருவில் எரிந்த வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் துரைக்கண்ணு! (படங்கள் இணைப்பு)

அதிரை கரையூர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. கேஸ் வெடித்த விபத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் அருகில் இருந்த 50 க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதனால் சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை முன்னாள் நகர் நண்ற உறுப்பினர் ஜவஹர் பாபு, அதிரை நகர அதிமுக செயலாளர் பிச்சை, நகர துணை செயலாளர் அஹமது தமீம், நகர பாசறை செயலாளர் அஹமது தாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, தீயில் கருகிய அரசு ஆவணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் தீயினால் சேதமடைந்த வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

Close