தினத்தந்தி வெளியிடும் ஆங்கில நாளிதழில் வெளியான அதிரை இளைஞர் காலித் குறித்த கட்டுரை!

அதிரை சேதுரோடு பகுதியை சேர்ந்தவர் காலித் அஹமது. சென்னை AMS பொறியியல் கல்லூரியில் 3 ஆண்டு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர் அதிரையிலும், சென்னையிலும் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். Crescent Blood Donors அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்து வரும் இவர் இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உடனுக்குடன் சமூக வலைதளங்களின் மூலமாக இரத்தம் கிடைக்க வழிவகை செய்து வருகிறார். அதே போல, ஊரில் விபத்துகள் நடந்தால் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் தனது நண்பர்கள் உதவியுடன் அனுமதித்து உதவி செய்து வருகிறார்.

அது போக சென்னையில் இயங்கி வரும் அறப்போர், D4V உள்ளிட்ட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்ள இவர் தொடர்ந்து சாலை பாதுகாப்பு, இரத்ததான விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து பள்ளிகளிலும் பொதுவெளியிலும் தனது நண்பர்களோட சேர்ந்து பிரச்சாரம் செய்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற காபி வித் எம்.எல்.ஏ நிகழ்விலும், நேற்றைய தினம் சென்னையை அடுத்துள்ள பாண்டேஷ்வரத்தில் நடைபெற்ற உழவே தலை மாநாட்டிலும் இவரது உழைப்பு அளப்பறியது.

கடினமான பொறியியல் படிப்பை படித்துக்கொண்டு இவர் ஆற்றிவரும் சமுதாய சேவைகளுக்கான் Awareness India Movement அமைப்பின் சார்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில் இது வரை ஆயிரம் யூனிட்கள் இரத்தம் கிடைப்பதற்கு காலித் உதவியுள்ளார். இது குறித்து தினத்தந்தியின் ஆங்கில நாளிதழான DT NEXT இன் மாடல் சிட்டிசன் பெட்டகத்தில் காலித் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில நாளிதழின் கட்டுரை

“Model Citizen: ‘I have completed 1,000 blood donation requests’

Chennai: He is on a mission to better the lives of the people around him. At 22 years of age, he is the District Secretary of the Crescent Blood Donors, in Thanjavur District. In this capacity, he helps people who make complete blood donation requests. “I’ve completed more than 1,000 blood donation requests as of now. My parents have supported me right from the beginning,” said Khaalid.

While many shy away from helping accident victims, fearing legal proceedings, Khaalid has been involved in ensuring that they get a fighting chance. Even if the person passes away, Khaalid doesn’t stop helping the family.

“I make sure that the person involved in the accident reaches the hospital in time. It doesn’t matter if the person is dead or alive. If a person is left unattended to and none of the family members is at the hospital, we make it our task to find his/ her family and ensure that they reach home safely,” added Khaalid. When asked, what motivates him to save other’s lives, Khaalid said, “I have seen that many religions preach that saving one life is like saving the whole of humanity.

I’m a firm believer in this. This keeps the fire burning in me to do more for the people around me.” — As told to Gurumurthy R”

Close