வாணியம்பாடியின் வானம்பாடி வானமேகியதே!

தாய்ப் பறவைத்
தன் கவிக்குஞ்சுகளை விட்டு
வானமேகியதே
வாணியம்பாடியின்
வானம்பாடி!

“ரகு மானைத்” தேடியதாலே
ராமாயணமே தோன்றியதால்
ரகுமானே ராமாயணம் பேசுவேன்” என்று
எள்ளி நகையாடியோரைக்
கிள்ளிப் போட்ட சமயநல்லிணக்கப் புறா வானோக்கிப் பறந்து விட்டது!

அய்மான் சங்கம் முதல் சந்திப்பு
அன்னாரின் கவிதையின் தித்திப்பு
அன்றே துளிர்த்த எங்கள் நட்பு
இன்று இறப்பென்ற சேதி பரிதவிப்பு!

கவிக்கோவின் கரங்களால்
என் கவிதை நூலுக்கு
மதிப்புரை பெறவே விழைந்தனன்.
புவிக்குள்ளே உடலால்
புதைக்கப்படப் போவதை எண்ணி
பதைப்புடன் அழுகின்றேன்!

நீங்கள் உரமிட்ட
கவிதைகளின்
உள்ளீடும்
உவமைகளும்
எங்களை விருட்சமாக்கும்
இறைவா அன்னார்க்குசா
சுவனத்தை உறுதியாக்கு
இஃதே எங்களின் விருப்பமாகும்!!

கவிக்கோ அப்துற்றஹ்மான் இறப்பு
கண்ணீருடன்
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்

Close