அதிரை சிறுவன் ஜியாத்கான் வபாத்

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் மர்யம். தற்போது சங்கத்து கொல்லையில் வசித்து வருகிறார். கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்கு சென்று தனது 18 வயதான மூத்த மகன் ஜியாத்தை தம்பிக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜியாத் இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நிதியுதவி வேண்டி அதிரை பிறையில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இவர் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

இவருடைய உடல் இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Close