அதிரையில் ரமலான் துவங்கியதில் இருந்து அதிகரித்துள்ள மின்வெட்டு!

தமிழகத்தில் ரமலான் தொடங்கி 1 வாரம் கடந்துவிட்டது. வெயில் நேரத்தில் ரமலான் தொடங்கியுள்ளதால் மக்களுக்கு சற்று சிரமமாகவே உள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக சீராக அதிரையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதிரையில் ரமலான் தொடங்கியதில் இருந்து மின்சாரம் தடைபடுவது வாடிக்கையாகிவிட்டது.

ரமலான் தொடங்கிய முதல்நாளிலேயே சில மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இது குறித்து நாம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது ரமலானில் சீரான மின்சாரம் கிடைப்பதற்காக மின்சார லைன்களை சரி செய்வதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாரம் தான் சீரமைப்புக்காக மாதாந்திர மின் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாளொன்றுக்கு 5 அல்லது 6 முறை மின்சாரம் தடை செய்யப்படுகின்றது. இதுகுறித்து அவர்கள் பல காரணங்களை கூறினாலும் சொல்லி வைத்தார் போல் ஆண்டுதோறும் ரமலான் மாதங்களில் மட்டும் மின்சாரம் தடை செய்யப்படுவது ஒரு வித சந்தேகத்தையே பலருக்கும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Close