தஞ்சை மாநகரில் SDPI ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் மாடு, ஒட்டகம், எருது, கன்று ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க தடைச் செய்து கடந்த 23ம் தேதி உத்தரவிட்டுள்ளது. மோடியின் தலைமையிலுள்ள மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நாட்டு மக்கள் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்பதை தீர்மானிக்க முயல்கிறது. தனிமனித சுதந்திரத்தை பரிக்கும் மத்திய மோடி அரசின் இச்செயலை கண்டித்தும், தடை போடப்பட்ட அரசாணையை திரும்பபெற வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்டம்  சார்பாக தஞ்சை மாநகரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை மற்றும் தலைமையுரையை மாவட்ட பொது

செயலாளர் J.ஹாஜி ஷேக் அவர்கள் நிகழ்த்தினர்

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  A.அபூபக்கர் சித்திக் , திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் MLA., அவர்கள் மற்றும்

இந்தீய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் S.M. ஜெயினுலாபபுதீன்,விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கி.நா.பனசை அரங்கன், ஹனபியா பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி.அப்பாஸ் அலி,

மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கரிகாலன்,மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகர செயலாளர் அப்துல்லா

ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

 

மேலும்  மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

Close