அதிரையில் கலைஞரின் 94 வது பிறந்தநாளை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுக வினர் (படங்கள் இணைப்பு)

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழாவினை திமுக வினர் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அதிரையில் கருணாநிதி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை திமுக அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட அக்கட்சியினர் திமுக கொடியேற்றி சிறப்பித்தனர். அத்துடன் நகரெங்கும் உள்ள திமுக கம்பங்களில் கொடியேற்றிய திமுக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

Close