அதிரையில் தொடர் கதையாகி வரும் பெட்ரோல் திருட்டு!

நமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பெருநாள் தான். சஹர் செய்வது, தூங்குவது லுஹருக்கு எழுவது அமல்கள் செய்வது அஸருக்கு பிறகு நோன்பு கஞ்சி வாங்குவது இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கு வாங்கிக் கொடுப்பது, நோன்பு திறந்து விட்டு இஷா வரை வீட்டிலோ நண்பர்களுடனோ ஓய்வெடுப்பது, தராவீஹ் தொழுவது என்று மாதம் முழுவதும் நாட்கள் சுமுகமாக நகரும்.

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் அதிரை பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அதிரையர்கள் பலர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீட்டினுள் ஏற்றாமல் வீதியிலேயே விட்டு செல்கின்றனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கயவர்கள் சிலர் அந்த வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடி வருகின்றனர். பலருடைய பைக்குகளில் பெட்ரோல் திருட்டு போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Close