கோவையில் 5 இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் கைது! காவல்துறை அராஜகம்!

கோவை போத்தனூரை சேர்ந்த மாடு வியாபாரிகள் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கி வரும் வழியில் காவிகள் செட்டிபாளையத்தில் வைத்து வழிமறித்தனர்.

இதுவல்லாமல் போத்தனூர் TNTJ வை சேர்ந்த காதர் உட்பட் மாடு வியாபாரிகள் 5 பேரை காவல்துறையினர் காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதை கேட்ட உடனே மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள சகோதரர்களை உடனே விடுவிக்குமாறு கேட்டு கொண்டனர் .

அதே சமயம் TNTJ வினர், மாடு வியாபாரிகள், பிற இயக்க சகோதரர்கள் நூற்றுக்கனக்கானோர் ஆத்துபாலம் விரைந்தனர். நிலைமையை சுதாரித்த காவல்துறையினர் பிடித்து வைக்கப்பட்டு இருந்த அனைவரையும் விடுவித்தனர். இதனால் கோவையில் கலவரம் ஏற்படுத்த துடிக்கும் காவிகளின் சதி முறியடிக்கபப்ட்டுள்ளது.

தகவல்: TNTJ கோவை தெற்கு மாவட்டம்

Close