சென்னை செல்பவர்களுக்கு ஸஹர் உணவு வழங்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இதுகுறித்து எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்களின் முகநூல் பதிவு..!

“கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த இரண்டாம் தேதி இரவு ராஹத் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தேன்.

சிதம்பரம் கடந்து முட்லூரில் வண்டி நிறுத்தப்பட்டபோது சில இளைஞர்கள் வண்டிக்குள் ஏறி வந்து யார்யாருக்கெல்லாம் ஸஹர் உணவு வேண்டும் என்று கேட்டார்கள்.

என் அருகில் இருந்த நமது ஊரைச்சேர்ந்தவர் எவ்வளவு பணம் என்று கேட்டார்.

பணம் எதுவும் தரவேண்டியது இல்லை. பரங்கிப்பேட்டையில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து இருக்கிறோம். நோன்பு மாதம் முழுக்க இந்தப்பணியை செய்கிறோம் என்றாகள் .

நான் உட்பட இருபது பேர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக உணவுப் பைகளைப் பெற்றுக் கொண்டோம். இதே ரீதியில் அந்த ஊரில் நிறுத்தப்படும் அனைத்து வண்டிகளுக்கும் கொடுத்தார்கள்.

எங்களது வண்டி புறப்பட்டது. மூன்று மணி அளவில் விளக்குகள் இயக்கப்பட்டன. நானும் என்னிடம் இருந்த பையைப பிரித்தேன். உள்ளே

நெய்ச்சோறு நம்ம ஜாவியா ஸ்டைல்
கோழி குருமா
ஐந்து பொறித்த இரால்
தயிர் பாக்கெட்
ரஸ்தாளிப் பழம்
ஒரு கீற்று மாம்பழம்
ஊறுகாய் பாக்கெட்
இரண்டு தண்ணீர் பாக்கெட்டுகள்

அல் ஹம்துலில்லாஹ். அல்லாஹ் பரங்கிப்பேட்டைக்கு பரக்கத் செய்வானாக. ஆமீன்.

நமது ஊரைத்தாண்டியும் இரவில் பலர் பயணிக்கறார்களே. ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா?”

-எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author