கத்தார் நாட்டுடனான அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டிப்பதாக சவூதி அரசு அறிவித்துள்ளது..!

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி கத்தார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக சவுதி அறிவித்துள்ளது,இதனை அடுத்து அமீரகம்,பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் தனது உறவை கத்தாரோடு முறிக்கின்றனர். 14 நாட்களுக்குள் கத்தார் நாட்டினர் தனது நாட்டிற்கு திரும்பிச்செல்ல வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஹ்வான்களுக்கும்,ஹமாஸுக்கும் கத்தார் மன்னர் ஆதரவு அளித்ததையொட்டியும், டிரம்ப் வருகையை ஒட்டி அல் ஜசீரா வெளியிட்ட கேலிச்சித்திரத்திற்காகவும் இந்த தடை இருக்கலாம் என அறியப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே சவுதி,அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் அதன் இணையதளங்கள் தடைசெய்யப்பட்டது.

Reference:Arab news

Close