சவூதி ஜித்தாவில் அய்டா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டாவின் சார்பில் இன்று(05 ஜூன் 2017) திங்கள் கிழமை மாலை ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில்  இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்டாவின் தலைவர் ரஃபியா அஹமது தொடங்கி வைக்க, சல்வா ஷம்ஸ் கிராஅத் ஓத  சிறுமி சனா ஷம்ஸ், மொழி பெயர்ப்பு செய்தார். சகோதரர் ஜஃபருல்லாஹ் வரவேற்புரை வழங்கினார். அய்டாவின் சாதனைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி செயலாளர் ஷம்சுதீன் விளக்கமளித்தார்.

இறுதியில் இணைத்தலைவர் ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சகோ. அஸ்லம் தொகுத்து வழங்கினார்.

இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

Close