2018 -ஆம் ஆண்டில் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2017-2018 கல்வி  ஆண்டிற்கான 10,11,12- ஆகிய வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 10-ம்வகுப்புக்கான பொது தேர்வு மார்ச் 16-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.10-ம் வகுப்பிற்கான தேர்வு நேரம் 2.30 மணி நேரம் ஆகும். 10-ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும்.

 

11-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்.,16-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் மே-30-ம் தேதி வெளியிடப்படும். 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கப்பட்டு ஏப்.6- வரை நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் மே-16-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Close