அமீரகத்திலிருந்து பேஸ்புக்கில் கருத்திடுவோருக்கான எச்சரிக்கை பதிவு!

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி கத்தார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக சவுதி அறிவித்துள்ளது,இதனை அடுத்து அமீரகம்,பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் தனது உறவை கத்தாரோடு முறிக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த விசயம் விவாதப்பொருளாகி வருகிறது. ஏராளமான  தமிழ் முஸ்லிம்கள், வலைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக தங்கி இருப்போர் கத்தாருக்கு ஆதரவாகவும், சவூதி, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் கருத்திட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமீரக சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கட்டாருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் $136,000 டாலர் அபராத தொகை கட்டவேண்டும் என அமீரக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்

Courtesy: Gulf News

Close