கத்தார் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அந்நாட்டில் உள்ள அதிரை உபயதுல்லா வேண்டுகோள்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இது குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

தற்போதைய கத்தார் நிலவரம் கடைகள் அனைத்தும் வழக்கம்போலவே நடைபெறுகிறது. சவூதியிலிருந்து நேரடியாக வரகூடிய அல் மராய் போன்ற சிற்சில நிறுவனங்களின் ஃபிரஷ் பொருட்கள் மட்டுமே வரத்து குறைந்துள்ளது. நோன்பு காலம் என்பதால் பால், பிரட் சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்திருப்பதால் மட்டுமே இந்நிலை. ஆனாலும் மற்ற கம்பெனிகளின் ஃபிரஷ் தயாரிப்புகள் கிடைப்பதால் அதிலும் பிரச்சனையில்லை.
கத்தாரின் மீது விதிக்கபட்ட பொருளாதார தடையால் இதுவரை கத்தார் மக்களுக்கோ மற்ற வெளிநாட்டினருக்கோ இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் சாதாரணமாகவே இருக்கிறார்கள். ஆதலால் எந்த பதற்றமோ அசம்பாவிதமோ இன்றி அமைதியாகவே இருக்கிறோம். எனவே நாங்கள் ஏதோ பதற்றமான சூழ்நிலையில் இருப்பதாக தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில் வீண் பதிவுகள் பதிந்து ஊரில் இருக்கும் சொந்தபந்தங்களின் மத்தியில் பதட்டத்தை தயவுசெய்து உருவாக்காதீர்கள்.
அதுபோல கத்தார் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்கள் இந்த விவகாரத்தை பற்றிய கருத்தோ விமர்சனமோ அல்லது ஆதரவோ எதிர்ப்போ அது சார்ந்த பதிவுகளை பதிவதோ அல்லது பகிர்வதோ செய்ய வேண்டாம்.
கத்தாரிலிருந்து
#அதிரை_உபயா

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author