அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கன்னா நிஜாம் அவர்களின் தந்தை வஃபாத்!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த செ. மு. ஹாஜாமுகைதீன் அவர்களின் மகனும், மேலத்தெரு பெரிய மின்னார் மர்ஹூம் மு.மு.முஹம்மது ஷரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது ஹசன் மர்ஹூம் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், சேக்கனா பசீர் அகமது அவர்களின் சாச்சாவும், அதிரை நியூஸ் ஆசிரியர் நிஜாம், ராஜிக் முஹம்மதுஆகியோரின் தகப்பனாருமாகிய ஹெச்.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 09:30 மணியளவில் மேலத்தெரு சேக்கனா வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close