அதிரை கடற்கரைத் தெருவில் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் பள்ளம்! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாலையின் குறுக்கே செல்லும் கழிவு நீர் கால்வாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதால் பள்ளி குழந்தைகளுக்கு இந்த பள்ளத்தினால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சுதாரித்து கொள்வதற்காக அப்பகுதி இளைஞர்கள் அந்த பள்ளத்தின் அருகில் கற்களை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு சீரமைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Close