சிறப்பாக நடைபெற்ற அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் காதர்
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை : சகோ. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
ஆண்டு அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு : ஹாபிஃழ் J.நெய்னா முகமது ( இணை செயலாளர் )
நன்றியுரை​​ : சகோ.சாதிக் அகமது ( இணை தலைவர் )

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 4-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 47-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர – சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்

3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீது போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 14-ம் தேதி JULY 2017 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

Close