குவைத்தில் அதிரை பைத்துல்மால் கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை மாலை BOLLYWOOD RESTAURANT ஆடிடோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

உரை ​​: சகோ. ஜெய்னுல் ஹுசைன் (தலைவர்)

நிகழ்ச்சி தொகுப்பு ​: கமறுஜமான் (துணை தலைவர்)

சிறப்பு விருந்தினர்​: சகோ. அப்துல் ரஷீது (Jubail – Saudi Arabia)

1) அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் இஃப்தார் நிகழ்ச்சியும் மாதாந்திர கூட்டமும் சேர்த்து இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதரர்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.

3) சகோ ஜெய்னுல் ஹுசைன் தனது உரையில் ஜகாத்தை கணக்கிடுவதின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பைத்துல்மால் மூலம் ஏழைகளுக்கு பங்கிடவேண்டும் என்பதையும், இப்புனித மாதத்தில் ஸதக்காவை வாரி வழங்கவேண்டும் என்பதையும், ஸதக்கத்துல் பித்ர் நபருக்கு ஒரு தினார் வீதம் வழங்கும்படியும், நம் வங்கி கணக்கில் வந்துவிழும் வட்டியை என்ன செய்வது என்பதையும் விளக்கமாக விவரித்தார்.

4) மேலும், அதிரை பைத்துல்மாலின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அதற்கு நம் ஆதரவின் அவசியத்தயும் விளக்கினார்.

5) இக்கூட்டத்தில் மேலும் சில நிர்வாகிகள் சேர்க்கப்பட்டது.

6) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM குவைத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 7-ம் தேதி JULY 2017 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு சால்மியாவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது

Close