இங்கு யார் தீவிரவாதிகள்?

இங்கு யார் தீவிரவாதிகள்?

 

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது யார்?

 

நம் இந்தியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால்? அவர்களை நம் இராணுவம் எதிர்க்கும். இராணுவத்தோடு நாமும் கையில் ஆயுதம் ஏந்தி போராடி அந்நியர்களை விரட்டியடிப்போம்.

 

நம் தேசம் காக்க. அப்படி செய்தால் தான் நாம் இந்தியர்களாக இருக்க முடியும்.

 

இப்படி நாம் போர் செய்யும் வேலையில் அமெரிக்க, இஸ்ரேலிய கை கூலி ஊடகங்கள் நம் உரிமைக்காக குரல் கொடுக்கும் நம் இந்திய மக்கள் மீது தீவிரவாத பட்டம் கட்டி உலகெங்கும் பரப்பி விடும்.

 

நம் தேசத்தில் நடப்பது அறியாத பிற நாட்டு மக்கள் நம்மை தீவிரவாதிகள் என்றே மனதில் பதிய வைத்து விடுவார்கள். அது சரியான தகவறா? என்பதை ஆராய தவறிவிடுகின்றார்கள்.

 

அதே தான் #ஆப்கான், ஈராக் பாலஸ்தீனத்திலும் அவர்கள் நாட்டின் மீது போர் தொடுத்தவர்களை மக்கள் எதிர்த்து தாக்கினர். தன் நாட்டை சூரையாட வந்த அமெரிக்க இஸ்ரேலிய கயவர்களை மக்கள் எதிர்த்தனர்.

 

பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்தார்கள், அப்பாவி பெண்களை கற்பழித்து அமெரிக்க, இஸ்ரேல் இராணுவம் கொலை செய்தார்கள். தன் தேசம் காத்திட மக்கள் எதிரியின் இராணுவத்தை தாக்கினால் இவர்கள் எப்படி தீவிரவாதிகளாவார்கள்?

 

இவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் தீவிரவாத பட்டம் கட்டுகிறார்களா?

 

நம் தேசம் காத்திட நாம் போராடு வது போல் அவர்கள் தேசத்திற்காக அந்நாட்டு மக்கள் போராடுகின்றார்கள். ஈராக், ஆப்கான், பாலஸ்தீனர்கள்  உரிமைகாக போராடுபவர்களின் பெயர் தீவிரவாதியா?

 

யார் தீவிரவாதிகள்:

 

அநியாயமாக அப்பாவி மக்களை கொல்பவர்கள் தீவிரவாதியா?

 

தன் நாட்டை மீட்க உரிமைகாக போராடுபவர்கள் தீவிரவாதியா?

சிந்தியுங்கள்! மாற்றம் பிறக்கட்டும் இன்ஷா அல்லாஹ்!

 

–  Adirai Salih

Close