UKG பாட புத்தகத்தில் “நிலா நிலா ஓடிவா” பாடலில் மதத்திணிப்பு!

நமது ஆரம்ப பள்ளிப்பருவ காலங்களில் நமக்கெல்லாம் மிகவும் பிடித்த பாடலாக இருப்பது நிலா நிலா ஓடிவா பாடல். அதனை பள்ளி குழந்தைகள் தங்களுக்கே உரிய பாணியில் செய்கையுடன்  பாடுவதை பார்க்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கும். இந்த பாடலை வயதாகியும் இன்றளவிலும் நினைவில் வைத்துள்ளவர்கள் பலர் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது UKG பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்த பாடலை மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். அதில் கடைசி இரண்டு வரிகளுக்கு பதிலாக வேறு இரண்டு வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அஃதாவது “நடு வீட்டில் வைக்கவா! நல்ல துதி செய்ய வா!” என்ற வரிகளை மாற்றம் செய்து “ஈசன் முன்னால் வைக்க வா! இனிய துதி செய்ய வா!” என்று மாற்றம் செய்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது.

ஈசன் என்ற சொல் இந்து மத சகோதரர்களின் கடவுளான சிவனின் பெயரை குறிக்கும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், அவரவர் மதங்களை கடைபிடிக்க முழு சுதந்திரம் உடைய நாட்டில், கல்வியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினை மறைமுக போதிப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த இளம் வயதில் குழந்தைகள் மனதில் ஒரு விசயத்தை பதிய வைத்தால் அது பசுமரத்தாணி போன்று நன்றாக பதிந்துவிடும் என்பதை அறிந்த சில விஷமிகளின் சதிதான் இது. எனவே பெற்றோர்கள் என்னோரமும் முகனூலை மட்டும் படித்துக்கொண்டிருக்காமல், நம் குழந்தைகளின் பாடபுத்தகங்களையும் வாசித்து பாருங்கள். அதில் இடையிடையே பல விஷமத்தனமான கருத்துக்கள் பாய்ச்சப்படுகின்றன.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close