குவைத்தில் அதிரை இளைஞர் வாசிம் கான் வஃபாத்!

அதிரை பிலால் நகரை சேர்ந்தவர் பஷீர் அஹமது. அதே பகுதியில் மளிகை நடத்தி வருகிறார். இவரது மகன் வாடும் கான் (வயது 24). குவைத்தில் ஹெல்பராக பணி புரிந்து வருகிறார். திருமணமான இவருக்கு நேற்று தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வாசிம் கான் கடந்த நான்கு நாட்களாக வீட்டிடம் தொடர்பில் இல்லாததால் பதற்றம் அடைந்த உறவினர்கள் குவைத்தில் உள்ள அதிரையர்கள் மற்றும் அமைப்பினரிடம் உதவிகோரினர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Close