அதிரை பேரூராட்சியால் தோண்டப்பட்டு மூடாமல் விட்டு செல்லப்பட்ட பள்ளத்தால் ஆபத்து…! (படங்கள் இணைப்பு)

அதிரை செக்கடிக்குளம், சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகம் அருகாமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணறு பதிப்பதற்காக பேரூராட்சியால் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் வழக்கம் போல அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் விட்டு சென்றுவிட்டனர்.

பெண்கள் மதர்ஷா, செக்கடிப்பள்ளி, குடியிறுப்பு பகுதி என மக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் இருக்கும் பள்ளத்தால் பலருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அதிரை பேரூராட்சி A1 இடம் இப்பகுதி வாசிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிகான வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Close