மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதிரையில் சாலை மறியல் செய்த திமுக வினர் கைது (படங்கள் இணைப்பு)

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் திமுக உறுப்பினர்கள் மறியல் செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்தது காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

திமுக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி கட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  நகர துணைச்செயலாளர் அன்சர்கான், நகர அவைத்தலைவர் சாகுல்ஹமீது, கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் மற்றும் திமுக வினர் பலர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Close