லண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து! பலரது உயிரை காத்த முஸ்லிம் இளைஞர்கள்!

நேற்றைய லண்டன் கட்டிட தீ விபத்தில் முஸ்லீம்கள் தக்க தருணத்தில் விரைந்து ஆற்றிய மீட்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த லண்டன் மீடியாவே புகழ்கிறது.

இது ரமளான் மாதம் என்பதால் பின்னிரவு (2am~2.30am) நேரத்தில் அவர்கள் தஹஜ்ஜத் தொழுகை & ஸஹர் உணவு தயாரிப்பு என்று விழித்து இருந்ததால், தீ பரவிய ஆரம்ப நேரத்திலேயே அபாயம் உணர்ந்து… அக்கம்பக்கத்து ஃபிளாட்டுகளில் மட்டுமின்றி பல்வேறு தளங்களில் அயர்ந்து ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த பிற சமயத்தார் பலரின் வீட்டுக்கதவை தட்டி மக்களை எழுப்பி கட்டிடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். தீயிலிருந்து பலரை காப்பாற்றியும் உள்ளனர். இது ரமளானாக இல்லாது போயிருந்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்தோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்கின்றன லண்டன் மீடியா.

சென்னை வெள்ள மீட்புப்பணியில் தமிழ் ஊடகங்கள் இஸ்லாமிய இயக்கங்களை புகழ்ந்து பேசியது போல… இதுவும் நீண்டகாலம் லண்டன் மீடியாவில் பேசப்படலாம்.

Close