திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பயணிகளுக்காக புதிய பள்ளிவாசல்!

தமிழகத்தின் மத்திய மாவட்டமாகவும், நாளுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் தொழில் நகரமாகவும், நூற்றுக்கணக்கான பள்ளிகல்லூரிகளை உள்ளிடக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது. இதனால் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான இங்குள்ள ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவிலான துணிக்கடைகள்,  நகைக்கடைகள் உள்ளதால் பொதுமக்கள் பெருநாள் பொருட்களை வாங்குவதற்காக தற்போது குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் சத்திர பேருந்து நிலையத்துற்கு அருகே எந்த பள்ளிவாசல்களும் இல்லாத காரணத்தால் பலர் மலைக்கோட்டை வரை சென்று தொழுகையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சத்திரம் பெருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவருக்கு அருகே புதிதாக பள்ளிவாசல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும்.

Close