கத்தார் மன்னருக்கு நன்றி தெரிவித்து தங்கள் வீடுகளில் கொடியேற்றிய அந்நாட்டு மக்கள்!

“கத்தாரில் பதற்றம்” “மக்கள் பரிதவிப்பு” இப்படியான தலைப்பிட்டு சிலநாட்களுக்கு முன் உலக ஊடகங்கள் பிளாஷ் நியூஸ் போட்டு கத்தாரை ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுவதான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு…

கத்தாரின் மீது விதித்த பொருளாதார தடையால் கத்தார் சுருண்டு விழும் என எதிர்பார்த்த நாடுகளுக்கு கத்தாரின் அதிரடியான நடவடிக்கையால் வாயடைத்துதான் போனது.

பொருளாதார தடை ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிறிது சிரமமேற்பட்டது உண்மைதான். அதை உடனடியாக புரிந்துகொண்ட கத்தார் அரசு போர்கால அடிப்படையில் சமயோசிதமாக அதற்கான மாற்று ஏற்பாடு செய்தது. பல நாடுகளிலிருந்து வான்வழியே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து உணவுபொருள் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் மக்களின் பதற்றத்தை நீக்கியது.

இதற்கு பகரமாக கத்தார் மக்கள் அரசரை கவுரவிக்கும்விதமாக தங்கள் வீடுகளில் கத்தார் கொடிகளை ஏற்றியும் அரசரின் படங்களை வைத்தும் கத்தார் அரசுக்கான தங்களின் முழு ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர். (கத்தார் நேஷனல் தினத்தில் காண்பது போன்று) அதேபோல கத்தார் மக்களோடு சேர்ந்து பல நாட்டு மக்களும் கத்தார் அரசரின் பெயரும் படமும் போட்ட ஸ்டிக்கரை (கீழுள்ள படத்தில் காண்க) தங்கள் வாகனங்கள் மற்றும் வணிக ஸ்தலங்களில் ஒட்டி வைத்து அரசருக்கான தங்கள் முழு ஒத்துழைப்பை தெரிவிக்கின்றன.

தங்களின் அரசரை எதிலும் விட்டுகொடுக்காத மக்கள்.
நாட்டு குடிமக்களை எவ்வகையிலும் பரிதவிக்க விடாத அரசு. கத்தார் எப்போதும் வியக்க வைக்கும் ஆச்சர்யத்தின் சரித்திர குறியீடு.

தகவல்: அதிரை உபயா

Close