அதிரை கடற்கரைத்தெரு இளைஞர்கள் சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

ரமலான் தொடங்கி இறுதி பத்து நோன்புகளை இஸ்லாமியர்கள் நோற்று வருகின்றனர். மாதம் முழுவதும் அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் இந்த இறுதிப்பத்து நாட்களில் அதிரையில் பல்வேறு சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் இளைஞர்கள் சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நோன்பாளிகளுக்காக பல்வேறு சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினர்.

Close