அதிரையில் தலையில் இரத்தக்கட்டு ஏற்பட்டு உயிருக்கு போராடும் அப்சர் என்ற சிறுவனுக்கு உதவிடுவோம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது நஜீர் என்கிற அல்லாபிச்சை. ஆட்டோ ஓட்டுனரான இவர் ரமலான் மாதம் தொடங்கியதில் இருந்து கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் இஃப்தார் உணவு பரிமாறுவது போன்ற நன்மையான காரியங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அதிரை காதிர் முஹைதீன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவரும் அவருடைய 12 வயது மகன் முஹம்மது அப்சரும் இதில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இஃதாருக்காக தனது வீட்டில் சர்பத் தயார் செய்துகொண்டிருக்கும் போது சமைலரையில் உள்ள பழைய புகைக்கூண்டு அப்சர் மீது இடிந்து விழுந்தது.

இதில் பலத்த படுகாயமடைந்த முஹம்மது அப்சர் தஞ்சை வினோதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடைந்த கற்கள் பயங்கரமாக தாக்கியதில் மண்டை ஓடு உடைந்து  தலையில் இரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. அத்துடன் காதில் நிற்காமல் இரத்தம் கசிந்து வருகின்றது. இவருக்கு மருத்துவர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் உள்ள இவருக்கு சிகிச்சை அளிக்க பெரிய தொகை தேவைப்படுகிறது. எனவே இந்த ரமலான் மாதத்தில் இவருடைய நல்ல சுகத்துக்காக துஆ செய்வதுடன் கீழே உள்ள வங்கி கணக்கு எண்ணிற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

Bank Account Details
A/c Name : Nazeer Ahamed
A/c No: 1201101039088
Canara bank
Adirampattibam branch
Ifsc : CNRB0001201
Mob: 9788512524

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author