சவூதியில் புதிய பட்டத்து இளவரசராக முஹம்மத் பின் சல்மான் அறிவிப்பு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

செளதி அரேபியாவின் அரசர் தன்னுடைய மகன் மொஹமத் பின் சல்மானை, தனக்குப் பின் பட்டத்துக்கு வரும் வரிசையில் முதலாவதாக இருந்த தனது மருமகன் மொஹமத் பின் நயேஃபுக்கு பதிலாக, அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்துள்ளார்.

31 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் சல்மான் செளதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியில் தொடர்ந்து கொண்டே நாட்டின் துணை பிரதமராகவும் இருப்பார் என்பதுதான் அரசர் சல்மான் ஆணையின் சாரம்சமாகும்.

மொஹமத் பின் சல்மான் மற்றும் மொஹமத் பின் நயேஃப்
உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் பதவியிலிருந்து 57 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் நயேஃப் நீக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வார காலம் கூடுதல் பெருநாள் விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author