கடலில் கலக்கும் தண்ணீரை அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக திருப்பி விட சட்டமன்றத்தில் MLA சி.வி.சேகர் கோரிக்கை!

இன்று சட்டசபையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு CV சேகர் வைத்த கோரிக்கைகள்

1.நெல் சாகுபடியை நம்பியிருந்த பட்டுக்கோட்டை பகுதி மக்கள் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னை விவசாயத்தை பெரிதும் நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் தேங்காயை அரசு கொள்முதல் செய்து அதை தேங்காய் எண்ணெயாக உற்பத்தி செய்து கூட்டுறவு அங்காடிகளில் அரசே விற்பனை செய்யும்போது தென்னையை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்பாட்டால் தென்னை விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும்

2.கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தம் விதமாக நசுவினி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து இறைத்தல் திட்டம் (pumping scheme), மண்ணங்காடு CMP வாய்க்காலின் மூலம் தண்ணீர் சென்றால் 15 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கிராமங்கள் பாசன வசதி பெரும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றத்தர வேண்டும்.

3.பட்டுக்கோட்டை தொகுதியில் ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

Close