விழுப்புரம் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் இடித்து தரை மட்டமாக்கபட்ட ஈத்கா பள்ளி!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள வெல்கூர் கிராமத்தில் சர்வே எண் 18/1 ல் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஈத்கா (பள்ளிவாசல்) 80% கட்டிட பணி முடிந்ததுள்ளது.

 

இந்நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சமூக விரோதிகள் சிலரால் ஈத்கா பள்ளி வாசல் முழுவதுமாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டதோடு முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப் பட் டுள்ளது. ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகள் குறித்து தமுமுகவினருக்கு தகவல் வரவே கடந்த 11-06-2017 அன்று காலை தமுமுக மாவட்ட செயலாளர் பசல் முஹம்மத் தலைமையில் தமுமுக வினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று இடிக்கப்பட்ட ஈத்கா பள்ளிவாசலையும், கலவரத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரர் களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

 

இது தொடர்பாக சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் தமுமுக மேற்க்கொள்ளும் என பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில தலைவர் பேராசிரியரிடம் தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு விஷயத்தை கொண்டு செல்லவே தற்போது காவல்துறை நடவடிக்கையால் அமைதி ஏற்பட்டுள்ளது மேலும் தமுமுக நிர்வாகிகள் மற்றும் வெல்கூர் ஜமாத்தினர்கள் வன்னஞ்சர் காவல் நிலையத்தில் ஈத்கா மைதானம் இடித்த சமுக விரோதிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.

 

 

12-06-2017 அன்று கள்ளக்குறிச்சி தாசில்தார் தலைமையில் (பீஸ் மீட்டிங்) சமாதான கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படது. இதையடுத்து சம்மந்தப்பட்ட வர்களை கைதுசெய்துவிடுவோம் என காவல்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் சமாதான கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான (ஈத்கா பள்ளிவாசல்) இடத்தில் இருசாராரும் பிரவேசிக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய்துறையினரின் இந்த சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமுகவிரோதிகளுக்கு துணை போகும் காவல்துறையை கண்டித்தும் ஒருதலை பட்சமான கள்ளக்குறிச்சி தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளின் முஸ்லிம் விரோதபோக்கை கண்டித்தும் பேராசிரியர் தலைமையில் போராட்டம் நடை பெறும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source :TMMK Media

 

 

Close