அமீரகத்தில் வாட்சப் கால்களுக்கான தடை நீக்கம்

துபாய், ஜூன் 22 : ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட நாட்களாக  இருந்த வாட்சப் கால்களுக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

DU மற்றும் Etisalat பயனர்கள் அவர்களின் அமீரக எண்களின் மூலமாகவே உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைக்கலாம்.

இதுகுறித்து நமதூர் துபாய் நண்பர் ஒருவர் கூறுகையில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மிகவும் துல்லியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வசதி வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தகவலை உறுதி செய்தனர்.

 

Close