முஹம்மது ரிபாத் ஷாருக்கின் கலாம் சாட்டிலைட்டை விண்ணில் ஏவியது நாசா!

தமிழகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான முகமது ரிஃபாக் ஷாரூக் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள் நாசா விண்கலம் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ‘கலாம் சாட்’ என்ற 64 கிராம் எடையுள்ள இந்த சிறிய செயற்கைகோள் விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, அங்கிருக்கும் சூழல், அவற்றால் செயற்கைக்கோள்கள் அடையும் மாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதற்கு முகமது ரிஃபாக் ஷாரூக் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Close