இராமநாதபுரம் அருகே தராவீஹ் தொழுதுகொண்டிருந்த பெண்கள் மீது கல்வீச்சு! காவிகள் அட்டூழியம்! (படங்கள் இணைப்பு)

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பா நகர் பெண்கள் தொழும் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பிந்தி ரமலான் மாதத்தை முன்னிட்டு இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 27 ஆவது பிறை ஒற்றைப்படை இரவு என்பதால் வழக்கத்தை விட அதிகமான பெண்கள் தொழுகைக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இதனை சீர்குழைக்க நினைத்த காவிகள் பெண்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Close