அல்-அமீன் பள்ளி பாங்குடன் அதிரையர் உருவாக்கியுள்ள “I for Islam” என்னும் இஸ்லாமிய அப்லிகேசன்!

அதிரை சின்ன நெசவுத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஷாபி. சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மென்பொருள் தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து “I for Islam” என்னும் ஆண்டிராய்டு மென்பொருளை வடிவடைத்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபி, உருது ஆகிய 5 மொழிகளில் இயங்கக்கூடிய இந்த மென்பொருள் மூலம், அனைத்து ஊர்களின் தொழுகை நேரங்களும் துள்ளியமாக அறிந்துகொள்ளலாம். அத்துடன் அடுத்த தொழுகைக்கு இடையே எவ்வளவு நேரம் என்பதை இந்த மென்பொருள் தெரிவிக்கிறது. இதன் மூலம் தொழுகை தவறாதவாறு நமது வேலைகளை அமைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்லிகேசனில் தொழுகை அழைப்புக்காக அதிராம்பட்டினம் அல்-அமீன் பள்ளி பாங்கு ஒலிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details?id=com.luffa.iforislam

Close