அதிரையில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை சம்சுல் இஸ்லாம் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பான (SISYA) தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து பல்வேறு விதமான பொதுசேவைகள் முன்னெடுத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று சங்க வளாகத்தில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு முன்னதாக மாலை 5 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதை தொடர்ந்து SISYA செயலாளர் முஹம்மது சலீம் அவர்கள் விளக்க உரையாற்றினார். அதனை தொடர்ந்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள SHISWA எனப்படும் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், பெரியவர்கள், இளைஞர்கள் என 700க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

தகவல்: சாலிஹ் (அதிரை பிறை)

Close