கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஏழை மாணவர் அப்துர்ரஹ்மானின் மருத்துவ செலவிற்கு உதவிடுவோம்..!

பேராவூரணியை அடுத்துள்ள ஒட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மகன் அப்துர் ரஹ்மான். பள்ளிக்கொண்டான் லாரல் பள்ளியில் படித்து வருகிறார். அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 480 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவருக்கு கிட்னி செயலிழந்ததை அடுத்து அவரது தந்தை முஸ்தபா தனது மகனுக்கு கிட்னியை தானமாக செய்ய முன் வந்தார். இதையடுத்து அவர்களுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இவர்களுக்கு மாதா மாதம் மருந்துகள், மற்றும் சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் செலவாகி வருகிறது. பொருளாதார அளவில் பின் தங்கிய இவர்களால் அவ்வளவு தொகையை மாதாமாதம் திரட்ட முடியவில்லை. எனவே உங்கள் உதவியை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

கணக்கு விபரம்:

R.Kavi

SBI ACCOUNT: 30264777867

IFSC: 0003395

Branch: Peravurani

Close