அதிரையில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள்களில் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரை சாணாவயலில் பெருநாள் சிறப்பு திடல் தொழுகை நடைபெறவுள்ளது.

காலை 7:30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பெருநாள் திடல் தொழுகையில் மௌலவி அப்துல்லாஹ் தவ்ஹீதி அவர்கள் கலந்துகொண்டு பெருநாள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இதில் வழக்கம் போல அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close