அதிரையில் பெருநாள் மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பகிர்ந்துகொண்ட இஸ்லாமியர்கள் (படங்கள் இணைப்பு)

இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான் முடிவடைந்து இன்று நோன்பு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தங்கள் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக அதிரை இஸ்லாமியர்கள் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகளை விநியோகம் செய்தனர். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்ட மாற்றுமத சகோதரர்களும் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Close