அதிரை மக்களுக்கு பெருநாள் பரிசு வழங்கிய மின்சார வாரியம்!

அதிரையில் வருடா வருடம், நோன்பு பேருநாள் ஹஜ்ஜு பெருநாளின் போது வழக்கமாக பெருநாள் தொழுகை, வாழ்த்துக்கள், புத்தாண்டை போன்று அனைவருக்கும் நினைவில் வருவது மின் தடை. அந்த வகையில் மின்வாரிய அதிகாரிகள் நேற்றைய தினமும், தங்கள் பணியை செவ்வனே செய்தனர். பெருநாளன்று மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருப்பது மின்சாரம். அந்த வகையில் நேற்றைய தினம், அதிரையில் 10 முறையாவது மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.

இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதுகுறித்து தொடர்ந்து அதிரை மின்வாரியத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்று வருடா வருடம் அவர்கள் செய்துகொண்டிருந்தாலும், மக்கள் தட்டிக்கேட்காததன் காரணமாக அவர்கள் இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

Close