அதிரை SSMG கால்பந்தாட்ட தொடர் – சென்னையை வீழ்த்தியது தஞ்சை!

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி நேற்று கடற்கரைத்தெரு மைதானத்தில் துவங்கியது. இதில் 2ஆம் நாள் ஆட்டமான இன்று தஞ்சை நேதாஜி அணியை எதிர்த்து சென்னை தமிழன் அணி களமிறங்கியது.

இதில் அபாரமாக ஆடிய நேதாஜி தஞ்சை அணி 2-0 என்ற கோல்கணக்கில் சென்னை தமிழன் அணியை வீழ்த்தியது.

நாளைய தினம் நடைபெறும் போட்டியில் காரைக்குடி அணியும், திருச்சி அணியும் மோதவுள்ளன.

Close