பெருநாள் தொழுகைக்காக தாமதமாக திருமணம் நடத்திய இந்து மத சகோதரர்களின் மதநல்லிணக்கம்!

பரமக்குடி ராஜா மஹால் அருகில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது அப்போது (இந்து)சகோகதரனின் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்போது அவர்கள் தானாக வந்து உங்கள் தொழுகைக்கு பிறகு நாங்கள் திருமணம் வைத்துக் கொள்கிறோம் என்று கூறினார் நாம் தொழுகையை முடித்தவுடனே அவர்கள் திருமணத்திற்கான வேலையில் இறங்கினர்.

அதுவரை இசை ஒலிபெருக்கி இயங்க வில்லை இது தான் மனித நேயம் இந்து திருமணங்களில் முக்கியமாக பார்க்க படுவது திருமண முகூர்த்தம் அதை நமக்காக அவர்கள் தளர்த்தி விட்டார்கள்.இது தான் எங்கள் தமிழ்நாடு.

எங்கள் தொப்புள்கொடி உறவுகள் இருக்கும் வரை எவனாலும் எங்களை பிரிக்க முடியாது எங்களுக்கு சமய சடங்குகள் முக்கியமில்லை சகோதரத்துவம் முக்கியம் என்பதை நிரூபித்த மணமக்களுக்கும. அக்குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகளுடன் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Close