அதிரை – பட்டுகோட்டை சாலை டாஸ்மாக் கடை அருகே சாலை விபத்து (படங்கள் இணைப்பு)

 பூதமங்கலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து அதிரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரை காளி கோவில் டாஸ்மாக் கடை அருகே இவர் இருசக்கர வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு முகம் மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை காரணமாக, இந்த இடத்தில் விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Close